கல்பாக்கம் அருகே பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலி
கல்பாக்கம் அருகே பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலியானார்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அணுபுரம் அணுசக்திதுறை ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன். இவரது மனைவி மஞ்சுளாதேவி (வயது 50). இவர் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன் பதிர்கூடம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீடு திரும்புவதற்காக திருக்கழுக்குன்றம் மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலையருகே நடந்து வந்தார்.
சாவு
அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு செல்வதற்காக சாலையின் குறுக்கே அவர் வந்தபோது அரசு பஸ் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மஞ்சுளாதேவி உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story