டிராக்டரில் இருந்து விழுந்து 1 வயது குழந்தை பலி
சுல்தான்பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து 1 வயது குழந்தை பலியானது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து 1 வயது குழந்தை பலியானது.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
1 வயது குழந்தை
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது26). டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 வயதில் சுதிக்ரியான் என்ற மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமாரின் வீட்டுக்கு அவரது சகோதரர் டிராக்டரில் வந்தார். பின்னர் அவர் டிராக்டரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் அந்த டிராக்டரில் ஏறி சுதிக்ரியான் மற்றும் 2 குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர்.
கதறி அழுத பெற்றோர்
அப்போது திடீரென டிராக்டரில் இருந்து சுதிக்ரியான் கிழே தவறி விழுந்ததாக தெரிகிறது. இதில் அவன் பலத்த காயம் அடைந்தான். இதுகுறித்து மற்ற 2 குழந்தைகளும் ஓடி சென்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து விரைந்து வந்த அவர்கள், சுதிக்ரியானை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சுதிக்ரியான் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.
இது காண்போரின் கண்களை குளமாக்கியது. இந்த சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story