மண்சாலையாக மாறிய தார்சாலை
கொண்டம்பட்டி-அரசம்பாளையம் இடையே மண்சாலையாக மாறிய தார்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளளனர்.
கிணத்துக்கடவு
கொண்டம்பட்டி-அரசம்பாளையம் இடையே மண்சாலையாக மாறிய தார்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளளனர்.
பழுதடைந்த சாலை
கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டியில் இருந்து அரசம்பாளையம் செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அரசம்பாளையம், காரசேரி, சொலவம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வாகனங்கள் சென்று வருகிறது.
தற்போது இந்த சாலை பழுதடைந்து 5-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
கடும் அவதி
இது தவிர கொண்டம்பட்டியில் இருந்து அரசம்பாளையம் செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் அந்த தார்சாலை மண்சாலையாக மாறிபோனது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், பழுதடைந்த அந்த சாலையை சீரமைக்காமல் அலட்சியம் செய்து வருவதாக புகார் தெரிவித்து உள்ளனர்.
உடனடி நடவடிக்கை
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- கொண்டம்பட்டி-அரசம்பாளையம் இடையே உள்ள தார்சாலை பழுதடைந்து உள்ளதால், அந்த வழியாக செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அந்த வழியில் தெருவிளக்கு வசதி கூட இல்லை. இதனால் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, சாலையில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து விடுகிறோம்.
இதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொண்டம்பட்டியில் இருந்து அரசம்பாளையம் செல்லும் பழுதடைந்த சாலையில் ஆய்வு செய்து, உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story