அரசு பஸ் ஜப்தி
அரசு பஸ் ஜப்தி
கோவை
கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன். கருமத்தம்பட்டியில் உள்ள அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தேசிய விடுமுறை நாளில் வேலைக்கு வராமல் போனதாக கூறி, நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது. பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.பின்னர் தொழிலாளிக்கு சம்பளத்துடன் வேலை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் ஒரு ஆண்டாக தீர்ப்பை அமல்படுத்தாமல் அரசு போக்குவரத்து கழகம் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோர்ட்டு அரசு பஸ் ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று மதியம் 1.30 மணியளவில் கோவை ரெயில்நிலையம் அருகே கணுவாய் நோக்கி சென்ற அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
Related Tags :
Next Story