கோவையில் ரூ.4½ லட்சம் செல்போன்களை டெலிவரி செய்யாமல் மோசடி

கோவையில் ரூ.4½ லட்சம் செல்போன்களை டெலிவரி செய்யாமல் மோசடி
கோவை
கோவையில் ரூ.4½ லட்சம் செல்போன்களை டெலிவரி செய்யாமல் மோசடி செய்த கூரியர் நிறுவன ஊழியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூரியர் நிறுவனம்
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் விஜயன் (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் சாந்தீஸ்வரன், பார்த்திபன் ஆகியோர் டெலிவரி செய்யும் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து வாடிக்கையாளர்கள் ஆன்லைன் நிறுவனங்களில் ஆர்டர் செய்து வாங்கும் செல்போன்களை டெலிவரி செய்யாமல், போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக தெரிகிறது.
ரூ.4½ லட்சம் மோசடி
இந்த நிலையில் செல்போன்களை ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் ஆன்லைன் நிறுவனத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆன்லைன் நிறுவனத்தினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் செல்போன்களை டெலிவரி செய்யாமல், போலி ஆவணங்களை தயாரித்து டெலிவரி செய்ததுபோல கணக்கு காட்டியது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த சாந்தீஸ்வரன், பார்த்திபன் ஆகியோர் மொத்தம் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள் 49 செல்போன்களை டெலிவரி செய்யாமல் மோசடி செய்தது தெரியவந்தது.
2 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தனியார் கூரியர் நிறுவனத்தின் மேலாளர் விஜயன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், போலீசார்சாந்தீஸ்வரன், பார்த்திபன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






