போக்சோ சட்டத்தில் பனியன் தொழிலாளி கைது


போக்சோ சட்டத்தில் பனியன் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 10:30 PM IST (Updated: 29 Sept 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் பனியன் தொழிலாளி கைது

கோவை

முகநூல் மூலம் பழகி கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பனியன் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கல்லூரி மாணவி

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வரும் நாகராஜ் (வயது 27) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் முகநூலில் அடிக்கடி தொடர்பு கொண்டு பழகி வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்து பேசியதாகவும் தெரிகிறது. நாளடைவில் நாகராஜ் அந்த கல்லூரி மாணவிடம் தான் காதலிப்பதாக கூறினார். இதனை நம்பி கல்லூரி மாணவியும் அவரை காதலித்ததாக தெரிகிறது.

ஆசைவார்த்தை கூறி கடத்தல்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராஜ் அந்த மாணவியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம். நமது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் தன்னுடன் வருமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை உன்மை என நம்பிய மாணவியும் திருமணத்துக்கு சம்மதித்தார். சம்பவத்தன்று நாகராஜ் தான் கோவை வருவதாகவும் தயாராக இருக்கும்படியும் மாணவியிடம் கூறி உள்ளார். அதன்படி மாணவி தயாரானார்.

கோவை வந்த நாகராஜ் கல்லூரி மாணவியை திருப்பூருக்கு கடத்தி  சென்றார். பின்னர் தான் தங்கி இருந்த வீட்டில் வைத்து மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். தொடர்ந்து இருவரும் கணவன்-மனைவி போல வாழ தொடங்கினர்.

பாலியல் பலாத்காரம்

நாளடைவில் நாகராஜ் மாணவியை கட்டாயபடுத்தி பாலியல் தொந்தரவு செய்ய தொடங்கினார். இதனால் பயந்து போன மாணவி நாகராஜிடம் இருந்து தப்பித்து வீடு திரும்பினார். பின்னர் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை கடத்தி சென்ற நாகராஜீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வந்தனர்.

தொழிலாளி கைது

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் பதுங்கியிருந்த பனியன் தொழிலாளி நாகராஜை போலீசார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Next Story