கொட்டகையில் தீப்பிடித்து 16 ஆடுகள், 5 மாடுகள் கருகி சாவு


கொட்டகையில் தீப்பிடித்து 16 ஆடுகள், 5 மாடுகள் கருகி சாவு
x
தினத்தந்தி 30 Sept 2021 1:50 AM IST (Updated: 30 Sept 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

கொட்டகையில் தீப்பிடித்து 16 ஆடுகள், 5 மாடுகள் கருகி சாவு

பேரையூர்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே பொட்டிபுரத்தில் திருநகரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் 2 கொட்டகை அமைத்து ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். கொட்டகையின் மேல்புறத்தில் தகர சீட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை எதிர்பாராத விதமாக கொட்டகையில் தீப்பிடித்தது. இதனால் கொட்டகையில் இருந்த 16 ஆடுகள், 5 மாடுகள் மற்றும் 2 நாய்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. தகவல் அறிந்து டி.கல்லுப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பெருமாள் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத், டி.கல்லுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Next Story