குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியார் உள்பட 3 பேர் படுகொலை; தொழிலாளி வெறிச்செயல்


குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியார் உள்பட 3 பேர் படுகொலை; தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 30 Sept 2021 3:10 AM IST (Updated: 30 Sept 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூர் அருகே குடும்ப தகராறில் மனைவி, மாமியார் மற்றும் கொழுந்தியாள் ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு தலைமறைவான தொழிலாளி போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ராய்ச்சூர்: ராய்ச்சூர் அருகே குடும்ப தகராறில் மனைவி, மாமியார் மற்றும் கொழுந்தியாள் ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு தலைமறைவான தொழிலாளி போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

குடும்ப பிரச்சினை

ராய்ச்சூர் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யரமரஸ் கேம்ப் ரோட்டில் வசித்து வந்தவர் தொழிலாளி சந்தோபி(வயது 47). இவருக்கு திருமணமாகி வைஷ்ணவி(25), ஆரதி(16) என்ற மகள்கள் இருந்தார்கள். வைஷ்ணவிக்கும், சாய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. திருமணத்திற்கு பின்பு சாய் மற்றும் வைஷ்ணவி தனியாக வசித்து வந்தனர்.

கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவர் சாயுடன் வாழ பிடிக்காமல் ராய்ச்சூர் புறநகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வைஷ்ணவி வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மனைவி வைஷ்ணவியை பார்க்க மாமியார் சந்தோபி வீட்டுக்கு சாய் வந்திருந்ததாக தெரிகிறது.

வெட்டிக் கொலை

இந்த நிலையில், இரவில் வீட்டில் வைத்து வைஷ்ணவிக்கும், சாய்க்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சாய் வீட்டில் கிடந்த அரிவாளால் வைஷ்ணவியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மகளை காப்பாற்ற வந்த சந்தோபியையும் சாய் வெட்டியதாக தெரிகிறது. அத்துடன் மைத்துனி ஆரதியையும் சாய் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.இதில், 3 பேரும் பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். உடனே அங்கிருந்து சாய் தப்பி ஓடிவிட்டார்.

பரபரப்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் ராய்ச்சூர் புறநகர் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தன்னுடன் வாழ பிடிக்காமல் பிரிந்து வாழ்ந்ததால் உண்டான பிரச்சினையில் மாமியார், மனைவி மற்றும் மைத்துனியை சாய் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ராய்ச்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சாயை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ராய்ச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story