உத்திரமேரூர் அருகே ரூ.5 லட்சம் குட்கா சிக்கியது 2 பேர் கைது


உத்திரமேரூர் அருகே ரூ.5 லட்சம் குட்கா சிக்கியது 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 2:16 PM IST (Updated: 30 Sept 2021 2:16 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே ரூ.5 லட்சம் குட்கா சிக்கியது 2 பேர் கைது.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பஜார் வீதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். ஒரு கடையில் சோதனை செய்தபோது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளர் கானா ராம் (வயது 40) மற்றும் சுக்கிர ராம் (22) ஆகியோரை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவர்களது வீடு மற்றும் மாடியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருந்ததை ஒப்பு கொண்டனர். உடனடியாக அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்து அங்கிருந்து ரூ.5 லட்சம் குட்காவை கைப்பற்றினர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Next Story