பன்னாட்டு விமானங்களுக்கு நீடிக்கும் தடை: சென்னையில் 19 மாதங்களாக விமான சேவை பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதையடுத்து 2020-ம் ஆண்டு மாா்ச் 25-ந் தேதியில் இருந்து வெளிநாடுகளுக்கான பன்னாட்டு விமான சேவைகளும், உள்நாட்டு விமான சேவைகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.
சரக்கு விமானங்கள் மட்டும் இயங்க அனுமதி வழங்கியது.கொரோனா முதல் அலை குறைந்ததும் கடந்த ஆண்டு நவம்பா் இறுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறப்பு பன்னாட்டு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. உள்நாட்டு விமான சேவைகள் 70 சதவீதம் வரை இயக்க அனுமதி வழங்கியது.சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய், குவைத், அபுதாபி, சாா்ஜா, ஓமன், கத்தாா் உள்பட 15 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்நாட்டு முனையத்தில் 30-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு 200 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.சென்னை பன்னாட்டு முனையத்தில் இருந்து மொரீசியஸ், யாழ்ப்பாணம் உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 19 மாதங்களாக விமான சேவைகள் இல்லை. 19 மாத கால விமான சேவை பாதிப்பால் அங்கு செல்ல வேண்டிய மாணவா்கள், சுற்றுலா பயணிகள், புனித யாத்திரை செல்லும் பக்தா்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனா். இந்தியாவில் 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் சென்னையில் இருந்து பல நாடுகளுக்கு நேரடியாக விமான சேவைகளை இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு பன்னாட்டு விமான சேவைகளுக்கு இருந்த தடையை அக்டோபா் மாதம் 31-ந் தேதி வரை நீடித்துள்ளது. இது பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் கவலையை அளித்து உள்ளது.
Related Tags :
Next Story