வாக்குச்சீட்டு அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சீட்டு வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சீட்டு வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
9-ந்தேதி இடைத்தேர்தல்
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஜமீன்முத்தூரில் 6-வது வார்டு ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும் வருகிற 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. போளிகவுண்டன்பாளையம் 4-வது வார்டு ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு பெண் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து கிராமங்களில் காலை, மாலை நேரங்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை ஒன்றியங்களில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்த கூடிய வாக்குச்சீட்டுகள் ஒரு தனி அறையில் வைக்கப்பட்டு உள்ளன. அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
கண்காணிப்பு கேமராக்கள்
தென்குமாரபாளையம் ஊராட்சியில் 2,962 வாக்காளர்களும், திவான்சாபுதூர் ஊராட்சியில் 8,556 வாக்காளர்களும், ஜமீன்முத்தூர் 6-வது வார்டில் 634 வாக்காளர்களும் உள்ளனர். இந்த நிலையில் வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்குச்சீட்டுகள் கோவையில் இருந்து அந்தந்த ஒன்றியங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.மேலும் ஒரு தனி அறையில் வாக்குச்சீட்டுக்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவிர அந்த அறைக்கு முன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் தேர்தல் பிரிவு அலுவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story