வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2021 9:22 PM IST (Updated: 30 Sept 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி: 

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்துக்கு அரசு அறிவித்தபடி ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதோடு, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், பட்டதாரி அல்லாத பதவி உயர்வு பணியாளர்களின் துணை தாசில்தார் பதவி உயர்வை உறுதி செய்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

இதில் மாவட்ட பொருளாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் ஆகிய தாலுகா அலுவலகங்கள் முன்பும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story