அரசு பஸ் மோதி வாலிபர் சாவு


அரசு பஸ் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 1 Oct 2021 12:21 AM IST (Updated: 1 Oct 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

திருமங்கலம், 
கன்னியாகுமரியில் இருந்து வேலூருக்கு 18 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரியை சேர்ந்த டிரைவர் வசூல்ராஜா (வயது 45) பஸ்சை ஓட்டினார். திருமங் கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் ராய பாளையம் விலக்கு அருகே வரும்போது நடந்து சென்றவர் மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இதில் நடந்து சென்றவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story