நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Oct 2021 12:25 AM IST (Updated: 1 Oct 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட முதலியார்பட்டியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருவதாகவும், அதுவும் குறைவான அளவே வருவதால் பொதுமக்கள் பலர் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் முதலியார்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் குடிநீர் பிரச்சினை குறித்து நகராட்சி ஆணையாளர் பெற்பெற்றி டெரன்ஸ் லியோனிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு அவர், முதலியார்பட்டிக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் முற்றுகை போராட்டத்ைத கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
1 More update

Next Story