விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது; இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை  மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது; இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Sep 2021 9:41 PM GMT (Updated: 30 Sep 2021 9:41 PM GMT)

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்று கோபியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் குற்றம் சாட்டிப்பேசினார்.

கடத்தூர்
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்று கோபியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் குற்றம் சாட்டிப்பேசினார்.
பேட்டி
விடுதலை போராட்ட வீரர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் கோபியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கலந்து கொண்டு தியாகி பி.சீனிவாசராவ் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:- 
விவசாயிகளுக்கு எதிரான...
மத்திய அரசு நம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொது சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் நிறைவேற்றி உள்ளது.
தொழிலாளர்களின் சட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, 44 சட்டங்கள் 4 சட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிராக, தொழிலாளர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கையை மேற்கொண்டு உள்ள மத்திய அரசை எதிர்த்து போராட சபதம் ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story