காஞ்சீபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்
x
தினத்தந்தி 1 Oct 2021 9:45 AM GMT (Updated: 1 Oct 2021 9:45 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குச்சீட்டுகள் பிரிக்கும் பணிகள், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச்சீட்டுகளை பிரித்து அடுக்கும் மரப்பெட்டிகள் தயாரிக்கும் பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தீவிர கண்காணிப்பு

அப்போது குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் தேர்தல் பணிகளை கவனமுடன் செயல்படவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு அமைத்து தீவிர காண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story