மழைநீர் புகுந்தது


மழைநீர் புகுந்தது
x
தினத்தந்தி 1 Oct 2021 11:53 AM GMT (Updated: 1 Oct 2021 11:53 AM GMT)

குன்னத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 300 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குன்னத்தூர்
குன்னத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 300 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது
குன்னத்தூர் பகுதிகளில்  கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக  கருமஞ்செறை குன்னத்தூர் பெருந்துறை ரோட்டில் அமைந்துள்ள ஒளிவிளக்கு நகர், சுண்டக்காம்பாளையம் ஊராட்சி எம்.ஜி.ஆர், நகர், தாளபதி, குன்னத்தூர், ஊத்துக்குளி ரோடு ஆகிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. 
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது இந்த பகுதியில் பலத்த மழை பெய்தால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. நாங்களும் ஒவ்வொருமுறையும் அதிகாரிகளுக்கு கூறினால் அவர்கள் அப்போதைக்கு எங்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். வீட்டுக்குள் மழைநீர் புகாமலிருக்க எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆகவே நாங்கள் ரோட்டில் வந்து மறியல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.
உரிய நடவடிக்கை
இது பற்றிய தகவல் அறிந்ததும் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுத்து இனிமேல் வீட்டிற்குள் மழை நீர் புகாமல் இருக்க ஆவன செய்து தருவதாகவும் உறுதி கூறினார்கள். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர் மற்றும் தலைவர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.


--Next Story