பச்சை தேயிலைக்கு ரூ.14.73 விலை நிர்ணயம்


பச்சை தேயிலைக்கு ரூ.14.73 விலை நிர்ணயம்
x
தினத்தந்தி 1 Oct 2021 3:30 PM GMT (Updated: 2021-10-01T21:00:19+05:30)

பச்சை தேயிலைக்கு ரூ.14.73 விலை நிர்ணயம்

குன்னூர்

நீலகிரி மாவட்டத்திலுள்ள தேயிலை சிறு விவசாயிகள் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பச்சை தேயிலைக்கு கட்டுபடியான விலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து மாதந்தோறும் தேயிலை வாரியம் மூலம் பச்சை தேயிலைக்கு சராசரி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தென் மண்டல தேயிலை வாரியதேயிலை அபிவிருத்தி துணை இயக்குநர் ஹரி பிரகாஷ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேயிலை சந்தை கட்டுபாட்டு ஆணையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு சராசரி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி அக்டோபர் மாத மாவட்ட சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.14.74 பைசா விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

இந்த விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த சி.டி.சி. ரக தேயிலை தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையை மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்படுகிறது.

தேயிலை வாரியம் பச்சை தேயிலைக்கு நிர்ணயித்துள்ள சராசரி விலையை மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்குவதை தேயிலை வாரிய அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு்ள்ளது.
--------------

Next Story