திருச்செந்தூர் அருகே 2 வழிப்பறி திருடர்கள் கைது 29 பவுன் நகைகள் மீட்பு


திருச்செந்தூர் அருகே 2 வழிப்பறி திருடர்கள் கைது 29 பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 3:34 PM GMT (Updated: 1 Oct 2021 3:34 PM GMT)

திருச்செந்தூர் அருகே 2 வழிப்பறி திருடர்களை போலீசார் கைது செய்தனர்

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பரமன்குறிச்சி கஸ்பா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், உடன்குடி கிறிஸ்தியாநகரத்தை சேர்ந்த அற்புதராஜ் மகன் செல்வகுமார் என்ற சாமுவேல் (வயது 40), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கடம்பராயன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் ஸ்ரீராம் சந்திரபோஸ் (31) என்பது தெரியவந்தது. அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருடியது என்பதும், பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் தங்க சங்கிலியை வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 29 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் செல்வம் என்ற சாமுவேல் மீது 40-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-----------


Next Story