கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்

விவசாயிகள் நூதன போராட்டம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் வாக்கடை புருஷோத்தமன், நார்த்தாம்பூண்டி சிவா, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,121 பண்ணை குட்டைகள் 25 நாட்களில் பணி முடித்து உலக சாதனை பெற்றது. இதில் மனித உழைப்பு முக்கிய பங்கு வகித்ததை பாராட்டி பட்டாசு வெடித்து, பொதுமக்கள் இனிப்பு வழங்கினர்.
மேலும் பண்ணை குட்டைக்கு மனித உழைப்பை பயன்படுத்தியதை விளக்கும் வகையில் விவசாயிகள் மண்வெட்டியால் மண்ணை அள்ளி வீசி செய்து காண்ப்பித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி முடிந்தும் 20 நாட்கள் கடந்த நிலையில் பணியாளர்கள் வருகை பதிவு செய்ய வில்லை. எனவே கிராம சபை கூட்டத்தின் போது பணியாளர்கள் பணி நாட்கள் வருகை பதிவு செய்ய வேண்டும். குறைதீர்வு கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அறிவித்து உள்ளதை தொடர்ந்து மாவட்டம், தாலுகா அளவில் குறைதீர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும். முதல்- அமைச்சர் தனி பிரிவு மனுக்கள் மீது மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விவசாயிகளின் இந்த நூதன போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story