தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி


தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 Oct 2021 4:59 PM GMT (Updated: 1 Oct 2021 4:59 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். மாவட்டத்தில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 31 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 379 ஆகும். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 259 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,722 ஆகும்.

Next Story