பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், நெகமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நெகமம்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், நெகமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் வினியோகம் இல்லை
பொள்ளாச்சி அருகே நெகமம் பேரூராட்சியில் நெகமம், காளியப்பம்பாளையம், ரங்கம்புதூர், சின்னேரிபாளையம், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கே.கே.நகர், காந்தி நகர் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் செயல்படவில்லை.
முற்றுகை
இதனால் கடந்த 25 நாட்களாக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நெகமம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சீராக குடிநீர் வினியோகம் செய்ய செயல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருகிறோம்.
குற்றச்சாட்டு
இது தவிர தெருவிளக்குகள் சரிவர எரிவது இல்லை. அதை சரி செய்ய கோரிக்கை விடுத்தால் நடவடிக்கை எடுப்பது இல்லை. புதிதாக வீடு கட்ட அனுமதி வாங்க செல்பவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினர். அதற்கு குடிநீர் பிரச்சினை உள்பட அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று பேரூராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story






