பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல் வாலிபர் கைது


பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2021 10:39 PM IST (Updated: 1 Oct 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல் வாலிபர் கைது

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸ்காரர்கள் ஜவஹர், மணிமாறன், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் நேற்று மதியம் 3 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா விழுதுஉடையான் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் சக்திவேல்(வயது 35) என்பவர் பையில் 1,020 புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மணலூர்பேட்டை போலீசார் சக்திவேலுவை கைது செய்து அவரிடம் இருந்த 1,020 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story