வேரோடு சாய்ந்த மரம்


வேரோடு சாய்ந்த மரம்
x
தினத்தந்தி 1 Oct 2021 10:48 PM IST (Updated: 1 Oct 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே நூற்றாண்டு பழமையான அரச மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

தேனி: 

தேனி அருகே ஊஞ்சாம்பட்டியில் சாலையோரம் நூற்றாண்டு பழமையான அரச மரம் நின்றது. நேற்று முன்தினம் இரவில் அங்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது இந்த அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.  

ஊராட்சி நிர்வாகத்தினர் அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த மரம் விழுந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்திக், ஊஞ்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

1 More update

Next Story