நூதனமுறையில் ஆன்லைனில் பணம் பறிப்பு


நூதனமுறையில் ஆன்லைனில் பணம் பறிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 5:42 PM GMT (Updated: 1 Oct 2021 5:42 PM GMT)

நூதனமுறையில் ஆன்லைனில் பணம் பறிப்பு.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் ஓம்சக்திநகரை சேர்ந்த முருகேசன் மகன் முத்துராமலிங்கம் (வயது35).லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரின் வங்கி கணக்கினை தனது செல்போனில் போன்-பே செயலியில் இணைத்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் சில நாட்களுக்குமுன் இவரின் செல்போனிற்கு போன்பே நிறுவன பெயரில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் அவருக்கு ரூ.1,957 பரிசு விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி அடைந்த முத்துராமலிங்கம் அதனை திறந்து பார்த்தபோது இந்த பரிசை பெற போன்-பே செயலிக்குள் செல்லுமாறு கூறியதை ஏற்று சென்றுள்ளார். அதில் பரிசை பெறுவதற்கு வங்கி கணக்கில் பரிசுத் தொகையை செலுத்துவதற்கு ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்தவும் என்று கூறியதும் தனது வங்கி கணக்கில் நேரடியாக பரிசுத்தொகையை செலுத்தி விடுவார்கள் என்று கருதி ரகசிய எண்ணை அழுத்தி உள்ளார். அடுத்தநொடியே அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1,957 எடுக்கப்பட்டுவிட்டதாக குறுந்தகவல் வந்ததால் முத்து ராமலிங்கம் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து ஆன்லைன் மூலம் சைபர்கிரைம் பிரிவில் புகார் செய்ததன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story