திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 1 Oct 2021 11:35 PM IST (Updated: 1 Oct 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிக பட்சமாக குவிண்டால் ரூ.7,519-க்கு விலை போனது.

திருவாரூர்:
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிக பட்சமாக குவிண்டால் ரூ.7,519-க்கு விலை போனது.
பருத்தி ஏலம்
திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நிறைவு நிலையை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு விவசாயிகள் வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்.
அதிக பட்சமாக ரூ.7,519-க்கு விலை போனது
இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.
இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 519-க்கும், குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரத்து 409-க்கும் விலை கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 88-க்கு விற்பனையானது.
1 More update

Next Story