அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு


அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 1 Oct 2021 7:40 PM GMT (Updated: 1 Oct 2021 7:40 PM GMT)

அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு

வாடிப்பட்டி
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விராலிப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த சிறுமலை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மகன்கள் பெருமாள் (வயது 40), கணேசன்(33). இவர்களது நிலம் அருகே விராலிப்பட்டியை சேர்ந்த கண்ணன், செல்வம் ஆகியோருக்கும் இடம் உள்ளது. இதில் பாதை அமைப்பது சம்மந்தமாக இவர்களுக்குள் பிரச்சினை உள்ளது. இந்நிலையில் கண்ணன், செல்வம் ஆகியோர் நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கணேசன் மற்றும் பெருமாளை அரிவாளால் வெட்டியும். கத்தியால் குத்தி விட்டும் தப்பி சென்றனர். இதில் காயமடைந்த அண்ணன், தம்பி இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story