மூதாட்டியிடம் நகை பறிப்பு


மூதாட்டியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 7:46 PM GMT (Updated: 1 Oct 2021 7:46 PM GMT)

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மதுரை
மதுரை புதுமகாளிபட்டி ரோடு, நாகுபிள்ளை தோப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமிகாந்தம் (வயது 61). சம்பவத்தன்று இவர் சிந்தாமணி ரோட்டில் உள்ள மருந்து கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று லட்சுமிகாந்தம் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story