வேன் மோதி ஊழியர் சாவு


வேன் மோதி ஊழியர் சாவு
x
தினத்தந்தி 2 Oct 2021 1:26 AM IST (Updated: 2 Oct 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

வேன் மோதி ஊழியர் சாவு

திருமங்கலம்
திருமங்கலம் குமாரசாமி தெருவை சேர்ந்தவர் மனோகரன். கப்பலூர் சிட்கோ நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு கப்பலூர் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மனோகரன் மதுரை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
1 More update

Next Story