பஸ்களில் அரசு விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை


பஸ்களில் அரசு விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Oct 2021 1:38 AM IST (Updated: 2 Oct 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

பஸ்களில் அரசு விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர், 
தமிழக அரசு பொது போக்குவரத்திற்குஅனுமதி அளித்துள்ள நிலையில் நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொது மக்களுக்கும், போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் விருதுநகர் அருகே உள்ள பேய்க்குளம் கிராமத்நில் இருந்து விருதுநகருக்கு வரும் போக்குவரத்து கழக டவுன் பஸ்சில் படிக்கட்டுகளில் கூட நெருக்கடியான நிலையில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணிக்கும் நிலை தொடர்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஒருபுறம் இருந்தாலும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.  எனவே போக்குவரத்து கழக நிர்வாகம் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்குவதுடன் அனைத்து போக்குவரத்துக் கழக பஸ்களிலும் அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 More update

Related Tags :
Next Story