லாரி செட் அதிபர் வெட்டிக்கொலை


லாரி செட் அதிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 1 Oct 2021 8:46 PM GMT (Updated: 1 Oct 2021 8:46 PM GMT)

விருதுநகரில் லாரி செட் அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

விருதுநகர்,
விருதுநகரில் லாரி செட் அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 
வெட்டிக்கொலை 
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 58). இந்நகர் ரெயில்வே பீடர் ரோட்டில் லாரி செட் வைத்துள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் வேலை முடித்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பினார். 
அப்போது லாரி செட்டின் அருகிலேயே இவரை வழிமறித்த மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இவர் இறந்து கிடந்தது குறித்து அவருடைய மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது தந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார்.
போலீசார் விசாரணை 
 இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 
லாரியில் இருந்து சரக்கு இறக்குவது தொடர்பாக இவருக்கும், சுமை தூக்கும் தொழிலாளிக்கும் இடையே  பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை  ெதாடர்பாக கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விருதுநகர் ெரயில்நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இரவு ேநர ெரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் நகர் முழுவதும் வன்முறை செயலில் ஈடுபடுேவாரை கண்காணித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்தநிலையில் நகரின் மத்திய பகுதியில் கொலை சம்பவம் நடந்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story