நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2021 8:49 PM GMT (Updated: 1 Oct 2021 8:49 PM GMT)

புளியங்குடியில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

புளியங்குடி:
புளியங்குடி சிவாஜி சமூக நல பேரவை சார்பில் நடந்த விழாவுக்கு, நகர தலைவர் பாண்டிச்சேரி சுப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கோமதிநாயகம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சுலைமான், ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், நகர தி.மு.க பொறுப்பாளர் ராஜ்காந்த், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் வேலு, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புளியங்குடி நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ் வரவேற்று பேசினார்.
வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜிகணேசன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பயனாளிகளுக்கு வேட்டி, சேலை வழங்கினார். தொடர்ந்து சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Next Story