கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் பட்டாம்பூச்சி வடிவில் தோட்டம்


கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் பட்டாம்பூச்சி வடிவில் தோட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2021 2:46 AM GMT (Updated: 2 Oct 2021 2:46 AM GMT)

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்தவகையில், கோயம்பேட்டில் உள்ள ரெயில் பணிமனை பணியாளர்கள் குடியிருப்பு வளாகங்களில் அபூர்வ வகை நாட்டு மரக்கன்றுகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (இயக்கம் மற்றும் அமைப்புகள்) முன்னிலையில் நடப்பட்டன.

அதேபோல் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில், அயனாவரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 60 குழந்தைகள் பட்டாம்பூச்சி வடிவத்தில் தோட்டம் அமைத்தனர். பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் குழந்தைகள் மரக்கன்றுகளையும் நட்டனர்.

நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் காப்பக குழந்தைகள் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். அவர்களுக்கு ரெயில்கள் இயங்கும் விதம் மற்றும் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

Next Story