கூட்டுறவு வங்கியில் ரூ.34 லட்சம் முறைகேடு; தலைவர் உள்பட 3 பேர் கைது

காஞ்சீபுரத்தை அடுத்த காலூரில் வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.34 லட்சம் முறைகேடு செய்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
காஞ்சீபுரத்தை அடுத்த காலூரில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் செயலாளராக காஞ்சீபுரம் செவிலிமேட்டை சேர்ந்த தேவநாதன் (வயது 58), கூட்டுறவு சங்க தலைவராக காலூரை சேர்ந்த அசோகன் (62) மற்றும் விற்பனையாளராக காலூரை சேர்ந்த மணி (36) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கூட்டு சேர்ந்து ரூ.34 லட்சத்து 6 ஆயிரத்து 240 முறைகேடு செய்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காஞ்சீபுரம் கூட்டுறவு துணைப்பதிவாளராக இருந்த உமாபதி, சென்னை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
வணிக குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் மேற்பார்வையில், காஞ்சீபுரம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தேன்மொழி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். பின்னர் இது தொடர்பாக தலைவர் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story






