பூந்தமல்லி சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ரவிகண்ணா காரில் மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென புகை வந்தது. மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ரவிகண்ணா (வயது 34). இவர், தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று தனியார் நிறுவனத்தில் இருந்து காரை கொளப்பாக்கத்தில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு எடுத்து சென்றார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிகண்ணா, காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் காரின் பின்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் பாதி பகுதி தீயில் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story






