காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 நாட்கள் மதுக்கடைகள் மூடல்; கலெக்டர் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 நாட்கள் மதுக்கடைகள் மூடல்; கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 2 Oct 2021 7:19 AM GMT (Updated: 2 Oct 2021 7:19 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 6-ந்தேதி காஞ்சீபுரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியங்களில் முதல் கட்டமாகவும், 9-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் 2-வது கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 6-ந்தேதி காஞ்சீபுரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியங்களில் முதல் கட்டமாகவும், 9-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் 2-வது கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி 5 வட்டங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிலோமீட்டருக்குள் இயங்கும் மதுக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், ஓட்டலுடன் கூடிய மதுபானக் கூடங்கள் வருகிற 4,5,6,7,8,9 மற்றும் ஓட்டு எண்ணும் நாளான 12 ஆகிய 7 நாட்கள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story