தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2021 2:20 PM IST (Updated: 2 Oct 2021 2:20 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் தேவராஜ் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசவ நல்லாத்தூர் மசூதி தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 45). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். தேவராஜுக்கும் அவரது தாயாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக்கொண்ட தேவராஜ் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story