மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்


மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 2 Oct 2021 2:27 PM GMT (Updated: 2 Oct 2021 2:27 PM GMT)

முத்தையாபுரத்தில் மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

ஸ்பிக்நகர்:
முத்தையாபுரத்தில் மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

மாட்டு வண்டி பந்தயம்

மறைந்த இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன்  பிறந்தநாள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராம.கோபாலன் நற்பணி மன்றம் மற்றும் தெற்கு மண்டல பா.ஜ.க. சார்பில் முத்தையாபுரத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

முத்தையாபுரம் மெயின் பஜார் முதல் துறைமுகம் சாலை டாக் தொழிற்சாலை வரை தேன்சிட்டு, பூஞ்சிட்டு என்ற வகை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சீறிப்பாய்ந்த காளைகள்

இதில் தூத்துக்குடி, மதுரை, தேனி, கம்பம் பகுதிகளில் இருந்து 88 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. ஓம் முருகா பந்தய குழு தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

சமூக ஆர்வலர் மாதவன், இந்து வியாபாரி சங்க மாநில இணை செயலாளர் ஆறுமுகம், பா.ஜ.க. தெற்கு மண்டல தலைவர் முத்துகிருஷ்ணன், பொது செயலாளர் லிங்க மாரிசெல்வம், உமரி சத்தியசீலன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். போட்டி தொடங்கியதும் ஒவ்வொரு மாட்டு வண்டி காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இதில் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர் பிரபு, மாவட்ட செயலாளர்கள் அமுதாகணேசன், ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதற்கிடையே உரிய அனுமதியில்லாமல் மாட்டுவண்டி போட்டிகளை நடத்தியதாக 10 பேர் மீது முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story