கல்லார் மலைவாழ் மக்கள் உண்ணாவிரத போராட்டம்

கல்லார் மலைவாழ் மக்கள் உண்ணாவிரத போராட்டம்
வால்பாறை
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை அருகே தெப்பக்குளமேடு பகுதிக்கு அருகில் கல்லார் மலைவாழ் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை களஇயக்குனர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, மலைவாழ் மக்கள் தெப்பக்குள மேடு பகுதியில் இடம் வழங்குவதோடு, குடியிருப்பு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அதிகாரிகள் தெப்பக்குளமேடு என்ற இடத்தில் உங்களுக்கு வீடுகள் கட்டிக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வனத்துறையின் சட்டத்தின் அடிப்படையில் தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் எடுக்கப்பட்டு உங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் அவர்கள் மாவட்ட கலெக்டர் நேரில் வரவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். இதுபற்றி அறிந்ததும் தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை அமீது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைவாழ் மக்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Related Tags :
Next Story