வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது


வழக்கில் கோர்ட்டில்  ஆஜராகாதவர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2021 10:17 PM IST (Updated: 2 Oct 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது

நல்லூர்
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் கோவில் வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் வழியில் உள்ள சித்ரா தோட்டத்தில் வசித்து வந்தவர்  மணிகண்டன் (வயது31). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி வீட்டு முன்பு சாலையோரம் தனது தந்தை பாலன் பிள்ளையுடன் படுத்து தூங்கினார். அப்போது அந்தவழியாக தண்ணீர் லாரியை திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, கே.சங்கல்பட்டியை சேர்ந்த ஆர்.திருப்பதி (45), ஓட்டிவந்துள்ளார்.  அப்போது லாரியை பின்னால் இயக்கியபோது தூக்கிக்கொண்டிருந்த மணிகண்டன் மீது ஏறியது. அதில் மணிகண்டன் சம்பவ இடத்தில் இறந்தார். 
இது குறித்து ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்து நீதிமன்றத்தில் தண்டனை வழங்கியுள்ளனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நல்லூர் தலைமை காவலர் முருகன் தலைமையில் முருகப்பெருமாள், செல்வம் உள்ளிட்ட போலீசாருடன் தனிப்படை அமைத்து திருப்பதியை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் சந்திரபுரம் பகுதியில் இருந்த அவரை போலீசார் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
1 More update

Next Story