தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
x
தினத்தந்தி 2 Oct 2021 4:50 PM GMT (Updated: 2 Oct 2021 4:50 PM GMT)

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாராபுரம், 
தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிறந்த நாள் கொண்டாட வந்தனர்
திருப்பூரை அடுத்த இடுவாய் வாசுகி நகரை சேர்ந்தவர் முத்துசண்முகம் மகன் ஆதித்யராம் (வயது 16). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். 
இவர் தனது நண்பரான கள்ளிமந்தயத்தைச் சேர்ந்த சூர்யாவின் (15) பிறந்த நாளை கொண்டாடுவதற்காக நேற்று மதியம் திருப்பூரில் இருந்து வந்தார். அவருடன் அவரது நண்பர்களான செல்வக்குமார் (15), அகிஷ் (15) ஆகியோரும் சென்றனர். அவர்கள் 3 பேரும் தாராபுரம் பஸ் நிலையத்துக்கு வந்து  இறங்கினர்.
அவர்கள் 3 பேரையும் கள்ளிமந்தயத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து செல்ல சூர்யா தாராபுரம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் அவர்கள் 4 பேரும் கள்ளிமந்தயத்துக்கு நடந்து சென்றனர். தாராபுரம் -ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் வந்த போது அமராவதி ஆற்று பாலம் கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
மூழ்கி பலி
அப்போது எதிர்பாராத வகையில் ஆற்றுக்குள் ஆதித்யராம் சிக்கினார். இதனைக் கண்டதும் நண்பர்கள் 3 பேரும் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனைத்தொடர்ந்து தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
அதன் பேரில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி 2 மணி நேரம் போராடி ஆதித்யராமை பிணமாக மீட்டனர்.
அவரது உடலைப்பார்த்து நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதைத்தொடர்ந்து அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story