மேட்டுப்பாளையத்தில் மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருட்டு


மேட்டுப்பாளையத்தில் மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 2 Oct 2021 4:53 PM GMT (Updated: 2 Oct 2021 4:53 PM GMT)

மேட்டுப்பாளையத்தில் மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருட்டு

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாலப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வித்யா. 

கடந்த 29-ந் தேதி தேவராஜ் வீட்டை பூட்டிவிட்டு, சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு மளிகை பொருட்கள் வாங்க சென்றார். இதற்கிடையில், வித்யாவின் உறவினர் விரபாண்டி பிரிவு திருவள்ளூவர் நகரை சேர்ந்த பிரதீப் (30) என்பவர் தேவராஜ் வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடைக்கு சென்ற வந்த தேவராஜ் வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்து 5¼ பவுன் தங்க நகை மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் வீட்டிற்கு வந்த வித்யாவின் உறவினர் பிரதீப்பை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்தான் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டை திறந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நகை மீட்டனர்.

Next Story