கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 2 Oct 2021 5:55 PM GMT (Updated: 2021-10-02T23:25:37+05:30)

கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

இளையான்குடி, 
இளையான்குடியில் சீமான் அறக்கட்டளை மற்றும் மும்பை இண்டி கிரேஸ் மருத்துவ நிறுவனம், ஆரா ஆர்த்தோ கிளினிக் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம், மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை ராயல்சீமான் அறக்கட்டளை நிறுவன தலைவர் மற்றும் அ.ம.மு.க. மாநில சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் துருக்கி ரபீக் ராஜா தொடங்கி வைத்தார். சிவகங்கை மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் சந்துரு மற்றும் டாக்டர் ஜெபசன் இஸ்ரேல் ஆகியோர் நோயாளிகளுக்கு  மருத்துவ ஆலோசனை மற்றும் மாத்திரைகள் வழங்கினர். முகாமில் இளையான்குடி மற்றும் 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், முதியவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Next Story