கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் கைது


கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2021 7:06 PM GMT (Updated: 2 Oct 2021 7:06 PM GMT)

கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்

பொன்னமராவதி
காந்திஜெயந்தியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் பொன்னமராவதி நாத்துப்பட்டி பிரிவுரோடு அருகே மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கிவைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சங்கர் (வயது 42) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அருகே உள்ள ஒரு கம்பெனி குடோனின் பின்புறம் உள்ள முட்புதரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைத்து இருந்த 324 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.52,200 ஆகும். மேலும் சங்கரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.
இதேபோல, கந்தர்வகோட்டை அருகே முள்ளிக்காய்பட்டி மற்றும் முரட்டு சோளகம்பட்டி ஆகிய கிராமங்களில் கள்ளத்தனமாக மது விற்ற முருகேசன் (36), குமார் (41), சுப்பிரமணியன் (66) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 56 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விராலிமலை பகுதியில் மது விற்ற ஜெயப்பிரகாஷ் (22) கைது செய்யப்பட்டார்.
-

Next Story