ரேஷன் அரிசி பறிமுதல்


ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 2 Oct 2021 8:49 PM GMT (Updated: 2 Oct 2021 8:49 PM GMT)

அம்பை அருகே 1¾ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம்:
அம்பை அருகே அயன் சிங்கம்பட்டி கிராமம், வடக்கு தெருவில் இருந்து ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள நீரோடையின் மேற்கு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அம்பை குடிமைப்பொருள் தனி தாசில்தார் பிரபாகர் அருண் செல்வம் தலைமையில் சிங்கம்பட்டி வருவாய் ஆய்வாளர் அழகு மாரியப்பன் மற்றும் குடிமைப் பொருள் தனி வருவாய் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சாலையோரம் 35 பெரிய மூட்டைகள், 2 சிறிய மூட்டைகளில் என மொத்தம் சுமார் 1,772 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் கைப்பற்றி அம்பை நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

Next Story