அந்தியூா் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி சாக்கடை கழிவு நீரில் பெண்கள், நாற்று நடும் போராட்டம்


அந்தியூா் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி சாக்கடை கழிவு நீரில் பெண்கள், நாற்று நடும் போராட்டம்
x

அந்தியூர் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி சாக்கடை கழிவுநீரில் நாற்று நடும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூர்
அந்தியூர் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி சாக்கடை கழிவுநீரில் நாற்று நடும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 சாக்கடை கழிவு நீர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் ரோட்டின் இருபுறங்களிலும் சாக்கடை நீர் செல்வதற்காக வடிகால் வசதி கட்டப்பட்டது. 
ஆனால் சாக்கடை கழிவு நீ்ர் வெளியேறாமல் அப்படியே தேங்கி நின்றது.  தற்போது அந்தியூர் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீருடன் சாக்கடை கழிவுநீரும் வெளியேறி பர்கூர் ரோட்டில் குட்டை போல் தேங்கி நிற்கிறது. மேலும் அதிக அளவில் மழை பெய்யும்போது சாக்கடை கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. 
இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன்,       சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள்         தெரிவித்து வந்தனர்.
நாற்று நடும் போராட்டம்
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு பர்கூர் ரோட்டில் தேங்கி நின்ற சாக்கடை கழிவு நீரில் நாட்டு நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கைகளில் பதாகைகளை ஏந்தியும் பெண்கள் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் சாக்கடை கழிவுநீர் புகுந்துவிடுகிறது. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் எங்கள் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே ரோட்டில் தேங்கி உள்ள சாக்கடை கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று கெட்டிசமுத்திரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story