ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்-அதிகாரிகள் பேச்சுவார்த்தை


ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்-அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 2 Oct 2021 10:32 PM GMT (Updated: 2 Oct 2021 10:32 PM GMT)

ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆத்தூர்:
ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம்
சேலம் மாவட்டம் நத்தகரை, வாழப்பாடி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள டோல்கேடடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 50 பேர் நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்புசெழியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மிரட்டுவதாக புகார்
அப்போது டோல்கேட் ஊழியர்கள், தாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக டோல்கேட்டில் பணிபுரிந்து வருவதாகவும், இதுவரை சம்பளம் உயர்த்தப்படவில்லை என்றும் கூறினர்.
மேலும் சம்பள உயர்வு கேட்டால் பணி நீக்கம் செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினர். இதுதொடர்பாக டோல்கேட் நிர்வாகத்திடம் பேசப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு டோல்கேட் ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story