புளியந்தோப்பில் காந்தி சிலை உடைப்பு; போலீசில் புகார்


புளியந்தோப்பில் காந்தி சிலை உடைப்பு; போலீசில் புகார்
x
தினத்தந்தி 3 Oct 2021 5:49 AM GMT (Updated: 3 Oct 2021 5:49 AM GMT)

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சென்னை புளியந்தோப்பு குட்டி தம்புரான் தெருவில் உள்ள காந்தி சிலைக்கு, காந்தி தேசம் சமூக நல கூட்டமைப்பு நிறுவன தலைவரான காந்தி நாகராஜன் என்பவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அங்கு காந்தியடிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி முடித்து அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் காந்தி சிலையின் கையை மர்மநபர்கள் உடைத்து விட்டதாக நாகராஜனுக்கு தகவல் வந்தது. இதுபற்றி அவர், புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் காந்தி சிலையின் கையை உடைத்தது யார்? என விசாரித்து வருகின்றனர்.

Next Story