‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Oct 2021 3:32 PM GMT (Updated: 3 Oct 2021 3:33 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:
தேங்கி கிடக்கும் கழிவுநீர் 
தேனி அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் உள்ள சமுதாய கூடத்தை சுற்றிலும் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதி முழுவதும் குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் கழிவுநீரை வெளியேற்றவும், குப்பைகளை அள்ளிச்செல்லவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்யுவனியன், அல்லிநகரம்.
தெருவிளக்கு வசதி செய்யப்படுமா?
போடி விசுவாசபுரத்தில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பராஜ், விசுவாசபுரம்.

மழைக்காலத்தில் தெருவில் தேங்கும் தண்ணீர் 
வேடசந்தூர் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் அருகே உள்ள மேல்மாத்தினிபட்டி நந்தனார் தெருவில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இதே நிலை தான் நீடிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் தெருவில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே எங்கள் பகுதியில் மழைநீர் வழிந்தோட வாய்க்கால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனிவாசன், மேல்மாத்தினிபட்டி.
தொல்லை கொடுக்கும் தெருநாய்கள்
சாணார்பட்டி ஊராட்சி ராமன்செட்டியபட்டியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் அந்த வழியாக நடந்து செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், ராமன்செட்டியபட்டி.
குண்டும், குழியுமாக மாறிய சாலை
தேனி அல்லிநகரம் 3-வது வார்டு நேருஜி ரோட்டில் 6-வது தெருவில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அங்குள்ள சாக்கடை கால்வாயிலும் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. எனவே சாலை அமைப்பதுடன் சாக்கடை கால்வாயை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், அல்லிநகரம்.
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பழனி தெற்கு ரதவீதி, ஆவணி மூலவீதி, கடைவீதி, அடிவாரம், பத்ரா தெரு, அழகாபுரி ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று தெருநாய்கள் கடிக்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜனனி, பழனி.
அடிப்படை வசதி கிடைப்பது எப்போது?
கம்பம் கூடலூர் 1-வது வார்டு வீரணத்தேவர் சந்து பகுதியில் கடந்த பல ஆண்டுகளாகவே சாக்கடை கால்வாய், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டியன், கம்பம்.
மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்
சின்னமனூர் ஒன்றியம் காமாட்சிபுரம் பெரியார்நகரில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுப்புழுக்கள் உருவாகுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே மழைநீர் வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணபிரியன், சின்னமனூர்.


Next Story