சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 3 Oct 2021 10:43 PM IST (Updated: 3 Oct 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (வயது 64). இவர் பொள்ளாச்சியில் பகுதியில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வந்தார்.

 இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு, பொள்ளாச்சியில் இருந்து கோவில்பாளையம் வந்த ஞானபிரகாசம் பாரதிநகருக்கு செல்ல 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்.  

பொள்ளாச்சி-கோவை சாலையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று ஞானபிரகாசம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

 அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஞானபிரகாசம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story